Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா பெற்ற ரூ.22,000 கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்த தீர்ப்புக்கு தடை..!!

ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா பெற்ற ரூ.22,006 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடன் கொடுத்த வங்கிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரூ.22,006 கோடி கடனில் ரூ.6.5 கோடி மட்டும் செலுத்தினால் போதும் என 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ரூ.6.5 கோடி மட்டும் கட்டினால் போதும் என்ற அந்த உத்தரவுக்கு எதிராக எல்ஐசி மற்றும் யூனியன் பேங்க் ஆகிய வங்கிகள் மேல்முறையீடு செய்திருந்தன. இதனை விசாரித்த 5 பேர் கொண்ட அமர்வு சுபாஷ் சந்திரா வாங்கிய ரூ.22,006 கோடியில் ரூ.22,000 கோடி கடனை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது.  தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுபாஷ் சந்திர கோயங்கா, பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.