Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உதயகுமார் கோரிக்கை

திருமங்கலம: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கமுன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான உதயகுமார், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே அவருக்கு கூடுதலாக இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்’’ என்றார்.