Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டாப் 20ல் நுழைந்து யூகி பாம்ப்ரி சாதனை

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி (33), ஏடிபி இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 20வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ரோஹன் போபண்ணாவுக்கு பின், ஆடவர் இரட்டையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் டாப் 20க்குள் நுழைந்த முதல் வீரர் என்ற சாதனையை யூகி பாம்ப்ரி அரங்கேற்றி உள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஆஸி ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் யூகி பாம்ப்ரி, சுவீடன் வீரர் ஆந்த்ரே கோரன்சன் உடன் இணை சேர்ந்து ஆடினார். முதல் மற்றும் 2வது சுற்றுப் போட்டிகளில் அபார வெற்றிகள் பெற்ற யூகி பாம்ப்ரி இணை 3வது சுற்றில் தோல்வியை தழுவியது.