Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இளையோர் ஒலிம்பிக் போட்டி; வுஷு பிரிவில் பதக்கம் வென்ற ராஜ்குமாரி லான்சென்பி சானு: இந்தியாவுக்கு இதுவரை ஒரு வெள்ளி, 2 வெண்கலம்

தகார்: செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 31ம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மகளிர் சாங்குவான் ஒருங்கிணைந்த போட்டியில் வுஷுபிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த ராஜ்குமாரி லான்சென்பி சானு வெண்கல பதக்கம்வென்றார். இதன் மூலம் வுஷு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். சானு, 18.039 புள்ளிகளைப் பெற்று, எகிப்தின் சோண்டோஸ் சோன்போல் (18.660) மற்றும் வெனிசுலாவின் வலேரியா ஃப்ரான்னெரிஸ் டுடாமெல் (18.199) ஆகியோருக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சானு சாங்குவான் போட்டியில் 9.316 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், குன்ஷு போட்டியில் 8.723 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் வுஷு விளையாட்டு அதிகாரப்பூர்வ பதக்கப் போட்டியாகச் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே, இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு, ஜெர்மனியின் ஜோலினா ரெய்ன்ஹோல்டிடம் தோல்வி அடைந்தநிலையில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். நீச்சல் நட்சத்திரமான தினிதி தேசிங்கு பெண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.