Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளைஞர்களை மகிழ்விக்க ரீல்ஸ் மட்டும் போதாது: காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேவைப்படுவதால் அவர்களை மகிழ்விப்பதற்கு ரீல்ஸ் வெளியிடுவது மட்டும் போதாது என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இளைஞர்களின் வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மோடி அரசு செய்திகளில் கவனம் ஈர்க்கும் உத்திகளிலும் கவனத்தை திசைதிருப்பும் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றது.

முக்கிய உள்நாட்டு நிறுவனங்கள் முன்பு இருந்ததவைிட இப்போது குறைவான ஊழியர்களையே பணயமர்த்துவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக செக்செக்ஸ் 30 குறியீட்டில் உள்ள 11 முக்கிய நிறுவனங்களின் மொத்த புதிய பணியமர்த்தல் எண்ணிக்கையானது 2023-2024நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2025-2026ம் நிதியாண்டில் 27சதவீதம் சரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கூறி வருவது உண்மையாகி வருகின்றது.

மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் மிக மோசமான பாதிப்பு இளைஞர்கள் மீதே விழுந்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் 11 முன்னணி நிறுவனங்களில் 9 நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் 27சதவீதம் குறைந்துள்ளது. நாடு ஒரு தீவிரமான வேலைவாய்ப்பு நெருக்கடியை சந்தித்து வருகின்றது. எனினும் தீர்வுகளை தேடுவதற்கு பதிலாக அகங்காரம் பிடித்த அரசு அத்தகைய ஒரு பிரச்னை இருப்பதே இல்லை என்று மறுத்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.