தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் பரபரப்பு: போலீஸ் நிலையம் மீது ஏறி போதை வாலிபர் த*கொலை மிரட்டல்

 

Advertisement

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையக் கட்டிடத்தின் மேல்பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் குடிபோதையில் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். நீண்ட நேரமாக அங்கிருந்தபடியே கூச்சலிட்டு அட்டகாசம் செய்த அந்த வாலிபரை கீழே இறங்கச் செய்ய போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர் கீழே இறங்க மறுத்தார். இதையடுத்து பேருந்து நிலையத்தில் இருந்த சில ஓட்டுநர்கள் சாதுர்யமாக கட்டிடத்தின் மேல்பகுதிக்கு ஏறிச்சென்று, அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர், உடல் நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News