Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்ணை சர்ஜிகல் பிளேடால் கிழித்த போதை வாலிபர் கைது!

பெரம்பூர், செப்.3:  புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் ‘பி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா(40). தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அம்மு என்பவர் அதே பகுதியில் 7வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன்(27), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வார்டு பாயாக பணியாற்றி வருகிறார்.

திருமணமான நவீன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனைவி நித்யா அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவீனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் உறவினரான வனிதா அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நவீன் மதுபோதையில் வனிதா வீட்டிற்கு வந்து, எனது வாழ்க்கையை நீ தான் சீரழித்து விட்டாய் என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த சிறிய சர்ஜிகல் பிளேடால் வனிதாவின் கையில் கிழித்துள்ளார்.

இதில் காயம் அடைந்த வனிதாவை அவரது மகன்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வனிதா அளித்த புகாரின்பேரில் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த நவீன்(27) என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.