நவராத்திரி கொலுவை அழகாகவும் பாரம் பரியமாகவும் அமைக்க இதோ சில எளிய குறிப்புகள்:
*படி அமைப்பு: கொலு படிகளை எப்போதும் உறுதியான மேஜை அல்லது மரப் பலகைகளைக் கொண்டு அமைக்கவும். படிகள் சமமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின் வெள்ளை அல்லது வண்ணத் துணிகளை விரித்து நேர்த்தியாகத் தொடங்கவும்.
*கருப்பொருள்: இந்த ஆண்டுக்கான ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை (எ.கா. இராமாயணம், தசாவதாரம், கிராமிய வாழ்க்கை அல்லது இயற்கைப் பாதுகாப்பு) மையமாகக் கொண்டு பொம்மைகளை அடுக்குவது பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பாக இருக்கும்.
* பொம்மைகளின் அடுக்கு முறை: பெரிய பொம்மைகளை அடிப் படியிலும், சிறிய பொம்மைகளை மேல் படிகளிலும் வைக்க வேண்டும். கடவுள் சிலைகள் எப்போதும் மிக உயரமான படியிலும், மனிதர்கள் மற்றும் விலங்கு பொம்மைகள் கீழ் படிகளிலும் இடம்பெற வேண்டும்.
*பாரம்பரியக் கதை சொல்லல் (Storytelling): கொலு பொம்மைகளை இஷ்டம்போல வைக்காமல், ஒரு குறிப்பிட்ட வரிசையில் அதாவது மகாபாரதம், ராமாயணம் அல்லது விநாயகர் புராணக் கதைகளைக் குறிக்கும் வகையில் வரிசையாக வைத்தால் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் சிறுவர்களுக்கும் ஆன்மிகக் கதைகளை எளிதில் கற்பிக்கலாம்.
*படிகளுக்கு மெருகூட்டுதல்: மரப் படிகளுக்குப் பதிலாக படியின் ஓரங்களில் லேஸ் அல்லது ஜிகினா நாடாக்களை ஒட்டி அலங்கரித்தால் படிகள் மிகவும் ரம்மியமாகக் காட்சியளிக்கும்.
*மலர் அலங்காரம்: செயற்கைப் பூக்களுக்கு மாற்றாக தினமும் புதிய மல்லிகை, ரோஜா மற்றும் அரளிப் பூக்களைக் கொண்டு கொலு படிகளைச் சுற்றிலும் மாலைகளாகத் தொங்கவிட்டு அலங்கரிக்கலாம். இது வீடு முழுவதும் நறுமணத்தைப் பரப்பி நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.
*சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Eco-friendly): பிளாஸ்டிக் பொம்மைகளுக்குப் பதிலாக களிமண் (Terracotta) மற்றும் பாரம்பரிய மரப் பொம்மைகளைப் பயன்படுத்துவது நமது பாரம்பரிய கலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்.
*சிறப்பு நிகழ்வுகள்: நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் மாலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் அழைத்து பஜனை, கோலாட்டம் அல்லது லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வது போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பிரசாதம் வழங்குவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தைத் தரும்.
- எஸ்.விஜயலட்சுமி


