Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் 350

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் 350 என்ற புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 334 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,100 ஆர்பிஎம்-ல் 30 பிஎஸ் பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஏற்கெனவே உள்ள யெஸ்டியில் இதே இன்ஜின்தான் இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த புதிய இன்ஜின் முந்தையதை விட 0.9 பிஎஸ் பவரையும், 1.8 என்எம் டார்க்கையும் கூடுதலாக வெளிப்படுத்தும். 30-30-30 என்ற விதத்தில் இதனை இந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதாவது 30 பிஎஸ் பவர், 30 என்எம் டார்க், லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் மைலேஜ் என இதனை உருவாக்கியுள்ளது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் இடம் பெற்றுள்ளன.