யெஸ்டி ரோட்ஸ்டர் ரெட் வோல்ப் எடிஷன் மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 334 சிசி அல்பா 2 லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 29 எச்பி பவரையும், 29.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டூயல் சானல் ஏபிஎஸ், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் ஷாக் அப்சர்வர்கள், உள்ளன. 1970களில் வந்த யெஸ்டி மோட்டார் சைக்கிள் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.2.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


