Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏமன் நாட்டின் புதிய பிரதமராக ஷயா மொஹ்சின் அல் ஜிந்தானி நியமனம்

கெய்ரோ: ஏமன் நாட்டின் புதிய பிரதமராக ஷயா மொஹ்சின் அல் ஜிந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையேயான உள்நாட்டுப் போர் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அதிபர் தலைமைத்துவ கவுன்சில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை நேற்று வெளியிட்டது.

அதில்ஷயா மோஹ்சின் அல் ஜிந்தானி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் பிரதமராக இருந்த சலீம் பின் பிரெய்க்கின் ராஜினமாவை கவுன்சில் ஏற்று கொண்டு அல் ஜிந்தானியை அமைச்சரவையை அமைக்க அதிபர் தலைமையிலான தலைமைத்துவ கவுன்சில் உத்தரவை பிறப்பித்துள்ளது.

34 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில் முந்தைய அரசாங்கத்தைச் சேர்ந்த 10 அமைச்சர்களும், மூன்று பெண்களும் அடங்குவர். மர்வான் பராஜ் பின் கானிம் நிதி அமைச்சராகவும், முகமது அப்துல்லா அலி எண்ணெய் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். தாஹர் அலி அல்-அகிலி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.