யமஹா மோட்டார் நிறுவனம், எக்ஸ்எஸ்ஆர் 155 ஸ்கூட்டரில் புதிய மெட்டாலிக் பிளாக் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில், விவிஏவுடன் கூடிய 155சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும் 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெட்டாளிக் பிளாக் எடிஷனில், டேங்க், வீல்கள் உட்பட அனைத்தும் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டேங்க்கில் சில்வர் நிறத்தில் யமஹா லோகோ இடம் பெற்றுள்ளது. முன்புற டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்கள் மட்டும் தங்க நிறத்தில் இடம் பெற்றுள்ளன. இது மோட்டார் சைக்கிளுக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இத்துடன் சேர்த்து இந்த மோட்டார் சைக்கிளில் 5 வண்ணங்கள் உள்ளன. இதற்கேற்ப விலை வேறுபடும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெட்டாலிக் பிளாக் ரூ.1,58,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வண்ணங்களில் ஷோரூம் விலையாக மெட்டாலிக் புளூ சுமார் ரூ. 1,49,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவை அறிமுக விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை அதிகரித்துள்ளது. இதன்படி விவிட் ரெட் ரூ.1,52,990, மெட்டாலி்க்கிரே ரூ.1,56,990, கிரேயிஷ் கிரீன் மெட்டாலிக் ரூ.1,58,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
