யமஹா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட பேசினோ 125 எப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் சிறிய மாற்றங்களுடன் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. டெயில் பகுதி முன்பை விட சற்று ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 125 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 10.3 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பேசினோ எஸ், பேசினோ டிஸ்க் மற்றும் பேசினோ டிரம் என 3 வேரியண்டகளில் கிடைக்கும் டிரம் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.76,500. டிஸ்க் வேரியண்ட் சுமார் ரூ.88,000 மற்றும் எஸ் வேரியண்ட் சுமார் ரூ.95,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
