Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய இளம்படைக்கு ரூ.7.50 கோடி பரிசு

மும்பை: 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடியை பரிசாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இ்நதிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன் குவித்தது.

துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. சாதித்து காட்டிய இளம்படைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.7.50 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.