Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி கலக்கலாய் சாதித்த இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அசத்தல்

மதுரை: உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. மதுரையில் நேற்று நடந்த முதல் போட்டியில், ஸ்பெயின் அணி கலக்கலாக ஆடி 13-0 என்ற கோல் கணக்கில் நமீபியாவை சூறையாடி வென்றது. 2வது போட்டியில், பெல்ஜியம் அணி, 10-0 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், 3வது போட்டியில் நெதர்லாந்து அணி, 11-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும் வென்றன. 4வது போட்டியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது.

சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சிலி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. 2வது போட்டியில், வங்கதேசத்தை 3-2 என்ற கணக்கில் பிரான்ஸ் வென்றது. 3வது போட்டியில், கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. கடைசியாக மதுரையில் நடந்த போட்டியில், பி - பிரிவில் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா - சுவிட்சர்லாந்து அணிகள் களம் கண்டன.

போட்டி துவங்கி 2வது மற்றும் 11வது நிமிடங்களில் இந்திய வீரர் மன்மீத் சிங் அதிரடியாக 2 கோல்கள் போட்டு அசத்தினார். அதைத் தொடர்ந்து போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, பி - பிரிவில் முதலிடம் பிடித்து, இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.