Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பிபா உலக கோப்பை கால்பந்து; அர்ஜென்டினாவை அலறவிட்ட கேப் வெர்டே: சேம்சைடு கோலால் தப்பிய நடப்பு சாம்பியன்

மியாமி: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் ரவுன்ட் ஆப் 32 சுற்று இன்றுடன் முடிந்தது. அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா- குட்டி தீவான கேப் வெர்டே அணிகள் மோதின.

விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் ஆட்டத்தின் 29வதுநிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி கோலை அடித்து முதல் பாதியில் 1-0 என அணியை முன்னிலைப்படுத்தினார். இது உலகக் கோப்பை வரலாற்றில் அவரது 20வது கோலாகும்.

அறிமுக அணியாக களம் கண்ட கேப் வெர்டே எளிதில் பணிந்துவிடவில்லை. 59வது நிமிடத்தில் டெராய் டுவார்டே கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். 90 நிமிடம் வரை ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 92வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் கோல் அடித்தார். ஆனால், 104வது நிமிடத்தில் கேப் வெர்டேவின் சிட்னி லோப்ஸ் கப் அசாத்திய கோல் அடித்து 2-2 என ஆட்டத்தை மாற்றினார். இதனால் ஆட்டம் திக்..திக். நிலைக்கு சென்றது.

111வது நிமிடத்தில் மெஸ்ஸி வீசிய கார்னர் கிக்கை கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்ட, அது கேப் வெர்டே வீரர் டினே போர்ஜெஸ் மீது பட்டு எதிர்பாராதவிதமாக ‘சொந்த கோலாக’ மாறியது. இதன் மூலம் அர்ஜென்டினா 3-2 என வெற்றியை உறுதி செய்தது. வரும் 7ம் தேதி அட்லாண்டாவில் நடைபெறவுள்ள ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அர்ஜென்டினா, எகிப்தை எதிர்கொள்ளவுள்ளது.

வெறும் 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட கேப் வெர்டே கடைசி நிமிடம் வரை நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை அலறவிட்டு, உலகமே வியக்கும் வண்ணம் மிகச்சிறப்பாகப் போராடி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றது.

மெஸ்சி ராஜ்ஜியம்!

* உலக கோப்பையில் 20 கோல் அடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

* உலக கோப்பையில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் கோல் அடித்த ஒரே வீரர் மெஸ்சி தான்.

* உலக கோப்பையில் அதிக ஆட்டங்களில் (30போட்டி) ஆடிய வீரரும் அவர் தான்.

* நடப்பு உலக கோப்பையில் மெஸ்சி 7 கோல்களுடன் டாப்பில் உள்ளார்.