சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு வருமாறு: பதினெட்டே வயதில் உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றிருக்கும் குகேஷுக்கு பாராட்டுகள். தங்களது இந்த சிறப்புமிகு சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளமான மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், மற்றுமொரு உலக சாம்பியனை உருவாக்கி, செஸ் தலைநகரம் என்ற சிறப்பிடத்தை உலக அளவில் சென்னை தக்கவைத்துக்கொள்ளவும் அது துணை புரிந்துள்ளது. தமிழ்நாடு உங்களை எண்ணிப் பெருமைகொள்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.