வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம்,ஆஷ்வில்லியில் ஜி - 20 அமைப்பில் உள்ள நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது உலக வங்கி தலைவர் அஜய் பங்காவை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
மேலும் இந்த கூட்டத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ரஷ்ய நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவானோவ் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.




