Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்: 16 பேர் பலி, 35 பேர் படுகாயம்

துபாய்: ஏமனில் ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்க, இங்கிலாந்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் ஹமாஸ் படை இடையிலான போரில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹவுதி போராளிகள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ஹவுதிகள் நடத்தியதில் 3 கப்பல் மாலுமிகள் உயிரிழந்து விட்டனர். ஒரு கப்பலை சிறைபிடித்துள்ளனர்.

இன்னொரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் செங்கடல் பகுதியில் ரோந்து வருகின்றன. இருந்தபோதிலும் இந்த தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 16 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.