Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உக்கிரமடையும் போர்: உக்ரைன் மீது 315 டிரோன், 7 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் ஆயிரம் நாள்களை கடந்து நீடித்து வருகிறது கடந்த ஞாயிறன்று ஒரேஇரவில் உக்ரைன் மீது ரஷ்யா 479 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் இரண்டு நகரங்கள் மீது 315 டிரோன்கள், 7 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்கியது.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இதேபோல் தலைநகர் கீவ் மீதான ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.இது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.