இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவுடனான தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக சிறைச்சாலை மீது டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என அவரது கட்சி அச்சம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இம்ரான் கானை உடனடியாக பரோலில்/ விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கேபி அலி அமின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
+
Advertisement


