Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானில் குண்டுவெடித்து 11 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று காலை மினிலாரி ஒன்றில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள ஷாக்ராக் பகுதியில் லாரி வந்தபோது தீவிரவாதிகளால் சாலையோரத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் வாகனத்தில் இருந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.