Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் எண்ணிக்கை 1197ஆக அதிகரிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையானது 1197ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 23 சதவீதம் அதிகரித்து 1197 ஆக அதிகரித்துள்ளது. உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தோர்ன்டன், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு உடன் இணைந்து நடத்திய 12வது ஆண்டு ஆய்வு அறிக்கையில், இங்கிலாந்தில் தற்போது இந்தியர்களுக்கு சொந்தமான 1197 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 23 சதவீதத்துக்கும் அதிகமாகும். இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த 2024ம் ஆண்டு ரூ.7,92,127கோடியில் ( 68.09GPB billion) இருந்து இந்த ஆண்டு ரூ.8,38,879கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் இங்கிலாந்து முழுவதும் 126720 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. மேலும் கடந்த ஆண்டில் 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைகளை சேர்த்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.