Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் பூர்வீக பள்ளிகளின் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி குறைப்பு: டிரம்ப் நிர்வாகம் அடுத்த அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் பூர்வீக உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளுக்கு நடந்த துஷ்பிரயோகம் குறித்த தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான அரசு நிதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக குறைத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 20ம் நூற்றாண்டு வரையிலும் அமெரிக்க இந்திய உறைவிடப் பள்ளிகள் என அழைக்கப்படும் பூர்வீக உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதில் சேர்க்கப்பட்ட பழங்குடியின குழந்தைகள் பல்வேறு சித்ரவதைகள் அனுபவித்தனர். அவர்கள் தாய்மொழியில் பேச அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க கலாச்சாரத்திற்கு அவர்களை மாற்ற பயிற்சி தரப்பட்டது.

மேலும், சுமார் 1000 குழந்தைகள் இப்பள்ளியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இந்த கொடூர வரலாற்று தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் பழங்குடியின அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்த அமைப்புகளுக்கான நிதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது. அரசின் செலவின குறைப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 82 ஆயிரம் டாலர் குறைக்கப்பட்டுள்ளது.