Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம். கிருஷ்ணன்(40). திருமணமான அவர் மல்லிகா பேகம் என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். கடந்த 2015ல் வீட்டின் படுக்கை அறையில் இருந்த இருவரையும் கிருஷ்ணனின் மனைவி பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து தகராறு ஏற்பட்ட நிலையில் கிருஷ்ணன் தனது மனைவியை மிரட்டி தாக்கியதால் போலீசில் புகார் கொடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் 2018ம் ஆண்டு கிருஷ்ணன் சிறைக்கு சென்ற நிலையில் வேறு ஆண்களுடன் மல்லிகா தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மல்லிகா மீது கடுமையான ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கிருஷ்ணன் சரண் அடைந்தார். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.