லண்டன்: வடமேற்கு இங்கிலாந்தின் லங்காஷயரில் குடியேறிய பெற்றோருக்கு பிறந்தவர் டாக்டர் மும்தாஜ் படேல். இவர் ஒரு சிறுநீரக மருத்துவர், ஆலோசகர். டாக்டர் மும்தாஜ் படேல் இங்கிலாந்து ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன் தணிக்கையாளராகவும், கல்வி மற்றும் பயிற்சிக்கான துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ராயல் ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன் தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் டாக்டர் மும்தாஜ் படேல் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டாக்டர் மும்தாஜ் படேல் கூறுகையில், “ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. நான் அதனை சிறப்பாக வழிநடத்துவேன் ” என்றார்.
Advertisement

