Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியுடன் பேச்சு; இந்தாண்டு இறுதியில் இந்தியா வருவேன்: எலான் மஸ்க் தகவல்

வாஷிங்டன்: இந்தாண்டு இறுதியில் இந்தியா வருவேன் என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் எலான் மஸ்குடன் தொலைபேசியில் பேசினார்.

இந்த உரையாடலில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த நிலையில் எலான் மஸ்க் நேற்று சமூக வலைதளத்தில் பதிவிடுகையில்,’பிரதமர் மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது. இந்தாண்டு இறுதியில் இந்தியா வருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.