Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹமாஸ் தலைவர் உடல் இன்று அடக்கம்

டெஹ்ரான்: ஈரான் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஹனியேவின் உடல் வைக்கப்பட்டு இறுதி பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் புதிய அதிபர் மசூத் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹனியே உடல் அசாதி சதுக்கம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இஸ்மாயில் ஹனியே உடல் தெஹ்ரானில் இருந்து கத்தார் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, கடந்த 13ம் தேதி தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் வீசிய குண்டுவீச்சில் ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது தெய்ப் கொல்லப்பட்ட தகவலை இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ளது.