ஒட்டாவா: கனடாவில் உள்ள ஒரு குருத்வாராவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக வான்கூவர் நகரின் ராஸ் தெருவில் உள்ள ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


