Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாக். திட்டத்தை நிறுத்திய பிரமோஸ் ஏவுகணை: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பிரமோஸ் ஏவுகணை தாக்குதலால் தான் இந்தியா மீது திட்டமிட்டு இருந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ஆம் தேதி அதிகாலை பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்ததால் 4 நாட்கள் போர் நடந்தது. அப்போது பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த தாக்குதலை பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் தடுத்து நிறுத்தியதாக, அந்தநாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,’ இந்தியாவின் பிரம்மோஸ் பாகிஸ்தானின் திட்டமிட்ட தாக்குதலை முறியடித்தது. மே 9-10 இரவு, இந்தியாவின் தாக்குதலுக்கு நாங்கள் மிகப்பெரிய முறையில் பதிலளிக்க முடிவு செய்தோம். பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பாடம் கற்பிக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக இருந்தன. ஆனால் அந்த நேரம் வருவதற்கு முன்பே, ராவல்பிண்டி விமான நிலையம் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை குறிவைத்து, பிரம்மோஸைப் பயன்படுத்தி மீண்டும் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது’ என்று தெரிவித்துள்ளார். ஈரான் சென்ற ஷெபாஸ் ெஷரீப் , இந்தியாவுடன் பேச்சு வார்தைக்கு தயார் என்று கூறினார்.

பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக இருக்க முடியாது:இந்தியா

பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒப்படைப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ’ என்றார்.