புதுடெல்லி: பிடபுள்யுஎப் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லானியர் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ஜப்பானின் கொடை நரோகாவுடன் நேற்று மோதிய லானியர் 21-11, 21-11 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டா
இப்போட்டி 50 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 கொரிய வீராங்கனை ஆன் சே யங் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அகானே யாமகுச்சியை (2வது ரேங்க்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



