Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா குளோபல் பள்ளி, தேவாலா வனச்சரகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி, ஆல் தி சில்ட்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாளர் அனிஷ்பாபு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஷிதா, வனவர் சுரேஷ்குமார், நெல்லியாளம் நகராட்சி தூய்மை தூதுவர்கள் சிந்துஜா, தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி பேசும்போது, இயற்கை வளங்களை பாதுகாக்க தவறினால் நாளை சமுதாயம் வாழ்வு கேள்விக்குறியாக விடும்.

மழை அளவு குறைந்தால் மக்களின் நீராதாரம் பாதிக்கும். எனவே மழை வளம் அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்கிற நோக்கில் வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, தேவாலா பகுதி இரண்டாம் சிரபுஞ்சி என்று அதிக மழைப்பொழிவுக்கு பெயர் பெற்ற இடத்தில் குடி தண்ணீருக்கு சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது இயற்கை சீரழிவை குறிக்கிறது.

எனவே இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீரில் மாசுபடுத்துவதை தவிர்த்து நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதனால் காற்று மாசு ஏற்படுகிறது.ம் இவற்றை தவிர்க்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் பறவைகள் வாழவும் நமக்கு ஆக்சிஜன் முடிந்த பல்வேறு பொருட்களை வழங்குவதன் மூலம் பெரும் பயனளிக்க கூடியதாக உள்ளதால் இவற்றை பாதுகாக்க வேண்டும். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம் கொண்டாவது இயற்கை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், பள்ளி நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்து பேசினார்கள். சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நெல்லி, பாதாம் செண்பகம், நீர் நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி தூய்மை தூதுவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.