டெல்லி: வேலை தேடி அலுத்துப்போன ஓர் இளைஞர் 9 மாதங்களாக வேலை கிடைக்காமல் இருந்து இருக்கிறார். ஒரே ஒரு ரெஸ்யூம் அப்டேட் செய்ததால் வருடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளத்துடன் வேலை சேர்ந்துள்ளார். அதும் Chat GPT உதவியால், இந்த கதையை அவர் வலைத்தளத்தில் பகிர்ந்த உடனே இந்திய முழுக்க வைரல் ஆகியுள்ளது. டெல்லியை சேர்ந்த கணினி பட்டதாரி ஒருவர் கடந்த 9 மாதங்களாகவே எந்த நிறுவனத்தில் இருந்தும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். ஒரு நேர்காணலும் அவருக்கு சாதகமாக சரியாக வராமல் போனதால் அவர் தனது ரெஸ்யூமில் தான் பிரச்னை இருக்குமோ என்று சந்தேகித்துள்ளார்.
அதன் பிறகு அவர் Chat GPT பயன்படுத்துவதற்கு முடிவுக்கு வந்தார். சாட் ஜிபிடியில் தனது ரெஸ்யூமில் மிஸ்ஸிங் கீவேர்ட்ஸ் ஆட் பண்ணி ஜாப் டிஸ்கிரிப்ஷன்க்கு மேட்ச் ஆகும் மாதிரி மாற்றி கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு பிறகு Chat GPT அவர் முன்னாள் செய்த ப்ராஜெக்ட்களை நிறுவனம் எதிர்பார்க்க முறையில் எழுதி கொடுத்துள்ளது. ரெஸ்யூமை இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்க்கு அப்டேட் செய்து கொடுத்துள்ளதாம். இவர் இந்த ரெஸ்யூமை பயன்படுத்தி விண்ணப்பித்ததும் சில நாட்களையே பல இடங்களில் இருந்து இன்டர்வியூ கால்ஸ் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் தான் ஒரு பெரிய நிறுவனத்தில்இருந்து ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் என்ற ஆப்பர் லேட்டர் கிடைத்துள்ளதாம். 9 மாதங்களுக்கு மேலாக வேலை இல்லை என்று கவலைபட்டிருந்த அந்த நபருக்கு ஒரு ரெஸ்யூம் அப்டேட்டில் மிக பெரிய சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது . இந்த அனுபவத்தை ரெட்டிட் டெவலப்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எழுதியதை பார்த்து வேலை தேடி கொண்டு இருக்கும் இளைஞர்கள் இன்டெர்வியூ ரிஜெக்ட் அகுபவர்கள் பெரிதும் இன்ஸ்பியர் ஆகி இருக்கிறார்கள். 9 மாதம் வேலை இல்லாமல் இருந்த ஒருவர் மாதத்திற்கு 50லட்சம் உயர்ந்து இருக்கிறார். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.
