Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

துபாய்: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடக்க உள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதி வருகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 94 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தாலும், 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியது பேட்டிங் வரிசையின் பலவீனத்தை கோடிட்டுக் காட்டியது.

ஷபாலி வர்மா (64 ரன்), பிரதிகா ராவல் (22 ரன்), மந்தனா (19 ரன்) தவிர்த்து மற்றவர்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. பந்துவீச்சில் தீப்தி ஷ்ர்மா 1.1 ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நந்தனி, ஸ்ரீசரணி, கிராந்தி ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை சந்திக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றியுடன் (2 புள்ளி) சமநிலை வகித்தாலும், மொத்த ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

ஹாங்காங் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து முன்னிலையை தக்கவைக்கும் முனைப்புடன் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரிந்துகட்டுகிறது. கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பதால், ஹாங்காங் அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்வது இந்திய வீராங்கனைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.