Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்தியா - இங்கிலாந்து டிரா அடுத்த சுற்றுக்கு தகுதி

ஆம்ஸ்டெல்வீன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. டி பிரிவில் 2வது இடம் பிடித்த இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்தின் வேஜ்னர் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணி வீராங்கனைகளும் தற்காப்பு ஆட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதால் இப்போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி 0-0 என டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து தரப்புக்கு 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும், இந்தியாவுக்கு 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கிடைத்த நிலையில், ஒரு கோல் கூட அடிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. டி பிரிவில் சீனா 3 போட்டியில் 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இந்தியா 5 புள்ளிகளுடன் (1 வெற்றி, 2 டிரா) 2வது இடமும், இங்கிலாந்து (4 புள்ளி), தென் ஆப்ரிக்கா (0) அடுத்த இடங்களையும் பிடித்தன. சீனா, இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா வெளியேற்றப்பட்டன.