Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாயில் கோலாகல தொடக்கம்

துபாய்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து - ஹாங்காங் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் இத்தொடரில், 7 முறை சாம்பியனான இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, ஹாங்காங், பாகிஸ்தான், தாய்லாந்து அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம், இந்தோனேசியா, யுஏஇ அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் நாளை தாய்லாந்துடன் மோதும் இந்தியா, செப்.3ல் ஹாங்காங், செப்.5ல் பாகிஸ்தான் சவாலை சந்திக்கிறது. இந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

செப். 10, 11ல் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனல் செப்.13ம் தேதி நடக்க உள்ளது. போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்கும். 2024 பைனலில் (தம்புல்லா) இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, பாரதி புல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி.கமலினி (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, பிரேமா ராவத், ராதா யாதவ்,  சரணி, ரேணுகா தாகூர், நந்தினி ஷர்மா, கிராந்தி கவுடு, பிரதிகா ராவல்.