Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்களின் திருமண நாளில் எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: பெண்களின் திருமண நாளில் அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தினைச் செயல்படுத்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தில் கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இத்திட்டத்திற்கு 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.