நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சசிகலா (32). இவர் அப்பகுதியில் செயல்பட்ட முகவர்களிடம் எப்க்யூஎல் ஆன்லைன் செயலியில் ரூ.1.50 லட்சம் கட்டி ஏமாந்து உள்ளார். இதில் மனவருத்தத்தில் இருந்த சசிகலா நேற்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளானர்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே விவகாரத்தில் கடந்த ஆக.31ம் தேதி அதே ஊரை சேர்ந்த ஏஜென்ட் ராசு என்பவர் மர்மமான முறையில் மரத்தில் தூக்குப்போட்டு இறந்து கிடந்த நிலையில், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




