சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.60 கோடி மோசடி தாயுடன் பெண் கைது
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மலேசிய தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், சென்னை வளசரவாக்கத்தில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தமிழரசி, அவரது தாய் கோவிந்தம்மாள் ஆகியோர், மலேசியாவில் உள்ள எங்கள் நிறுவத்திற்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.61 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டனர். சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக போலி ஆவணங்கள் அனுப்பி ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமும் இவர்கள் ரூ.75 லட்சம் வரை ஏமாற்றியதும் தெரிந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களது வீடுகளில் சோதனை செய்த போது, மோசடி மூலம் சம்பாதித்த ரூ.1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் சர்க்கரை ஏற்றுமதி செய்ய தேவைப்படும் போலி ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.