Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெண் செய்தி வாசிப்பாளரை 3 மணிநேரம் அறையில் அடைத்து பாலியல் தொந்தரவு; பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: மனைவியும் சிக்கினார்

சென்னை: பெண் செய்தி வாசிப்பாளருக்கு வேலை தருவதாக கூறி 3 மணி நேரம் அறையில் அடைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உடந்தையாக இருந்த அவரது மனைவியும் வழக்கில் சிக்கியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தர். தொழிலதிபரான இவர், பங்கு சந்தை நிபுணர்.

இவர் மான்சன் கன்சல்டன்சி என்ற நிறுவனம் மூலம் பங்கு சந்தை தொடர்பாக ஆன்லைன் மற்றும் யூடியூப் மூலம் ஆலோசனைகள் மற்றும் வகுப்புகள் எடுத்து வருகிறார். மேலும் ஏற்றமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்று கடந்த 2021ம் ஆண்டு பெண் செய்தி வாசிப்பாளரை தொழிலதிபர் பி.ஆர்.சுந்தரத்தை நேர்காணல் எடுக்க அனுப்பினர். அதன் மூலம் தொழிலதிபருக்கு பெண் செய்தி வாசிப்பாளர் பழக்கமாகியுள்ளார்.

அந்த பழக்கத்தில் அடிக்கடி தொழிலதிபர் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவரது மனைவியுடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நட்பின் அடிப்படையில் தொழிலதிபரிடம் பெண் செய்தி வாசிப்பாளர் வேலை கேட்டுள்ளார். அதன் பிறகு இவர்களின் நட்பு அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு நாள் பெண் செய்தி வாசிப்பாளரை பட்டினப்பாக்கம் அடுக்குமாடி வீட்டிற்கு தொழிலதிபர் அழைத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழிலதிபர் மனைவி மங்கையர்கரசியிடமும் பாதிக்கப்பட்ட பெண் செய்தி வாசிப்பாளர் முறையிட்ட போது, அவர் கண்டுகொள்ளவில்லை. பிறகு கடந்த ஜூன் 29ம் தேதி தொழிலதிபர் பெண் செய்தி வாசிப்பாளரிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மீண்டும் அழைத்துள்ளார். அதை நம்பி பெண் செய்தி வாசிப்பாளரும் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது 3 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அப்போது அவரது மனைவியும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்தார் அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் செய்தி வாசிப்பாளரை 3 மணி நேரம் அறையில் அடைத்து தொழிலதிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனது கணவரின் செயலுக்கு உடைந்தையாக இருந்ததாக தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மனைவி மங்கையர்கரசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல தொழிலதிபர் ஒருவர் பெண் செய்தி வாசிப்பாளருக்கு வேலை தருவதாக தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.