Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெண் தலைமை காவலருக்கு பா*யல் தொல்லை: சக தலைமை காவலர் கைது!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார், தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தனர்.

பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு, நேற்று காவல்துறை வாகனத்தில் போலீசார் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் உடன் பயணித்த பெண் தலைமை காவலரிடம், சக ஆண் தலைமை காவலர் ஒருவர் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தலைமை காவலர், சம்பவ இடத்திலேயே அந்த ஆண் காவலரைத் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நேற்று இரவு திருநெல்வேலி திரும்பியதும் பாதிக்கப்பட்ட பெண் தலைமை காவலர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும், தாழையூத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெண் காவலரிடம் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, குமார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் சக பெண் காவலருக்கே தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.