குளிர்கால கூட்டத்தொடர் துணை ஜனாதிபதி ஆலோசனை
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் துணைதலைவர் ஹரிவன்ஸ், பொதுச் செயலாளர் பி.கே.மோடி ஆகியோருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை மாநிலங்களவை செயலகம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
Advertisement
Advertisement