Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு; அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: 200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு; அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெறும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக்கண் திறந்த காமராசர்தான். திராவிட மாடல் என்று சொன்னால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காலை உணவுத் திட்டம்; காமராசர் என்று சொன்னால் மதிய உணவு திட்டம்போல் திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவு திட்டம்;

விருதுநகரில் மாநாடு நடந்தால் அடுத்து வரும் தேர்தலில் நமக்கு வெற்றி உறுதியாகியுள்ளது. 200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு; அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா; அதற்காக உழைக்க நீங்கள் தயாரா? நான் தயார். இளைஞரணி தொடங்கப்பட்ட போது விருதுநகர் மாவட்டத்தில் எனது காலடி படாத கிராமமே இல்லை. விருதுநகர் மண்ணில் மருது சகோதரர்கள் போன்று பணியாற்றிய கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசுக்கு எனது பாராட்டுகள்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்கவிடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக திட்டமிடுகிறது. தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் போராடி தடுத்துள்ளோம். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு; வாய்ப்புகளை மறுத்த அநீதியை சமூக நீதியால் வென்றோம். மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலைதான் முதலில் இருந்தது.

மாநிலங்களுக்கு ஓரளவுக்காவது அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தோம். மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற பார்க்கிறது பாஜக அரசு. மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பதை இந்தியாவில் முதலில் நிகழ்த்திக் காட்டியது திமுகதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தை பெற்று தந்துள்ளோம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு உரிமைகளை பெற்று தந்துள்ளோம். மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்பட்டு வருகிறது; பாஜகவினால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு; தமிழ்நாடு தலைகுனியாது என்று சொல்லும் இயக்கமாக திமுக உள்ளது. தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் என்றும் இளைஞர்கள் தேவை

சுயமரியாதையை விட்டுக்கொடுத்த கட்சிகளை வீழ்த்த நீங்கள் தேவை. திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. இளைஞர்கள் கொள்கையோடு செயல்பட வேண்டும்; அதிக புத்தகங்களை படிக்க வேண்டும்; திராவிடம் தொடர்பான வீடியோக்களை பாருங்கள். இளைஞர்கள் புத்தகங்கள் வாசித்து கோர்வையுடன் எழுதிப் பழகி, சிறு சிறு கூட்டங்களில் பேச வேண்டும்

7 வது முறையாகவும் திமுகதான் ஆட்சி அமைக்கும். திமுகதான் 7வது முறையாக ஆட்சி அமைக்கும் எனப்தில் நமது எதிரிகள் உள்பட யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். ஒன்றிய அரசின் தர வரிசையிலும் தமிழ்நாடுதான் முதலிடம். கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் செய்த சாதனைகளைப்போல் எந்த அரசும் செய்யவில்லை. பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம்.

நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி; விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.