குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல்செய்வது ஏன் தவெக அரசுக்கு சாத்தியமாகாது?: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி
சென்னை: தவெக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


