Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வென் த மியூசிக் சேன்ஜஸ்!

ஒரு ஆண் பொது இடங்களில் தன்னை எப்படி காண்பித்துக் கொள்கிறான் என்பதில் கூட உடன் இருக்கும் பெண்ணின் பாதுகாப்பு அடங்கியிருக்கிருக்கிறது. இதனை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது “வென் த மியூசிக் சேன்ஜஸ்” குறுந்திரைப்

படம்.

தான் யார் என்பதில் அதீத கர்வம் கொண்ட ஒரு இளைஞன். அவன் தன்னை தன் கர்வத்தை அதிகம் நேசிக்கிறான் என்பதாலேயே உடன் இருக்கும் காதலி அவனது அக்கறை அல்லது தேவைப்

படும்போது அவன் அன்பு கிடைக்காமல் தவிக்கிறாள்.

எங்கே சென்றாலும் தற்பெருமை, கர்வம் என ஒரு உணவகத்தில் ஒரு நண்பர்கள் குழுவிடமும் வம்பிழுக்கிறார். கிட்டத்தட்ட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் குழுவை உணவகத்தில் இருந்து வெளியேற்றுகிறார். விளைவு காதலி தான் காதலனால் அவமானப்படுத்தப்பட்ட நண்பர்கள் குழுவிடம் ஒருநாள் சிக்கிக் கொள்கிறார். ஐந்து பேரும் மாறி மாறி கூட்டுப் பலாத்காரம் செய்கிறார்கள். அந்த இக்கட்டான சூழலில் கூட அவள் தனது காதலனுக்கு போன் செய்ய, போன் எடுக்கப்படவில்லை. கிரிக்கெட் பார்ப்

பதில் மும்முரம் காட்டும் காதலன் தொடர் அழைப்புகளை உதாசீனம் செய்கிறார். பிறகு அந்தப் பெண்ணே தானாக மருத்துவமனை சென்று வழக்கு பரிசோதித்து தன் நண்பர்களுக்கு அழைத்து வழக்கும் கொடுக்கிறார். இது எதுவும் தெரியாமல் கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடக்கிறார் காதலன்.

பலாத்காரம் செய்தவர்கள் காவலர் களிடம் பிடிபட்டாலும் கூட காதலன் முழுக்க தான் தற்பெருமை பேசி அவர்களை நான் விட மாட்டேன். நான் யார் எனக் காட்டுவேன் என சபதம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் எதுவும் மாறவில்லை, நான் உன்னுடன் இருக்கிறேன். எதற்கும் நீ பயப்பட வேண்டாம், உன்னை விட்டு நான் எங்கும் போக மாட்டேன் என சொல்ல அவள் வெகுண்டெழுகிறாள். பிறகு கொடுக்கப்படும் முடிவு தான் சமூகத்துக்கு கொடுக்கும் சாட்டையடியாக நிறைவு பெறுகிறது.

தன்னை விரும்புவது இயற்கை ஆனால் தன்னை மட்டுமே விரும்புவதால் மற்றவர்கள் உதாசீனம் செய்வது நியாயமல்ல. மேலும் ஒரு அழைப்பு நமக்கு வருகிறது எனில் அதை கூடுமானவரை அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அம்மா, அக்கா, தங்கை, மனைவி, காதலி, தோழி என யாரேனும் ஏதேனும் ஆபத்தில் இருக்கலாம். நம் உதவி தேவைப்படலாம்.

போலவே எதையும் யாருக்காகவும் மறைக்க தேவையில்லை, யாருக்கும் நாம் பணிந்து போகவும் தேவையில்லை. குற்றம் செய்தவர்கள்தான் இங்கே தலைகுனிந்து நிற்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. என்பதை மிக ஆழமாகவே எடுத்து வைக்கிறது இந்தத் திரைப்படம். பொதுவாக நமக்கான அங்கீகாரம் ஓரிடத்தில் இல்லை என்றால் அவ்விடத்தை விட்டு நகர்வதுதான் சுய

மரியாதை. அதையும் இப்படம் சொல்லத் தவறவில்லை.

லட்சுமி தேவி எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, குறிப்பிடத்தக்க விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டர்டுரோ பணியாற்றியுள்ளார். ஃபைடி டாக்கீஸ் எல்.எல்.சி. நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் லக்ஷ்மி தேவியுடன் திரிகுண் (எ) ஆதித் அருண், விக்னேஷ் சிவசுப்ரமணியம், நவீன் ஜார்ஜ் தாமஸ் மற்றும் ஷ்ரேயா நவிலே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு திறமையான கலைஞர்களின் பங்களிப்புடன் உருவான இப்படம், இந்தியாவைத் தாண்டி சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஹூஸ்டன் உலகத் திரைப்பட விழாவில் இப்படம் தங்க ரெமி விருதை வென்றதுடன், சிறந்த இயக்குநருக்கான விருதையும் லட்சுமி தேவி பெற்றார். அதே ஆண்டில் மும்பையில் நடைபெற்ற ஒன்பதாவது இந்தியன் சினி திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் இப்படம் பெற்றது.

இதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நியூயார்க் நகர சுயாதீன திரைப்பட விழாவில் சிறந்த நடுத்தர நீளத் திரைப்படத்திற்கான விருதையும் இப்படம் வென்றது. மேலும், மாலிபு திரைப்பட விழா, சாக்ரமென்டோ சர்வதேச திரைப்பட விழா, நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவின் சிறந்த குறும்படத் திரைப்பட விழா மற்றும் சினிக்வெஸ்ட் திரைப்படம் மற்றும் மெய்நிகர் உண்மைத் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெற்றதுடன், முக்கியமான விருதுகளையும் வென்றிருப்பது இப்படத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குநர் என வெவ்வேறு பிரிவு களில் கிடைத்த அங்கீகாரம், இப்படத்தின் கலைத்திறனையும் லக்ஷ்மி தேவியின் பன்முகப் படைப்பாற்றலையும் வெளிப் படுத்துகிறது.

(யூடியூபில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு இந்தத் திரைப்படம் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்கவும்)

- மகளிர் மலர் குழு.