Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அயர்லாந்தை புரட்டி எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கீஸி கார்டி அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டு 142 பந்துகளில் 170 ரன்கள் குவித்தார். தவிர, கேப்டன் சாய் ஹோப் 75 ரன், ஜஸ்டின் கிரீவ்ஸ் 50 ரன் குவித்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 385 ரன் குவித்தது. பின்னர், 386 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. அதனால், டிஎல்எஸ் முறைப்படி, 46 ஓவர்களில் 363 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அயர்லாந்து, 29.5 ஓவரில் அந்த அணி 156 ரன் மட்டுமே எடுத்ததால், 197 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகத்தான வெற்றி பெற்றது.