ரோம்: மேற்கு ஆசியாவில் உடனடி போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ரோம் நகரில் நடந்த மெடிட்டிரியன் விவாதம் என்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசுகையில்,‘‘ மேற்கு ஆசியாவில் ராணுவ நடவடிக்கையில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை இந்தியா ஏற்று கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தக்கூடாது.உடனடி நடவடிக்கையாக, போர் நிறுத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். நீண்ட கால நடவடிக்கையாக,பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் குறித்து நாம் முடிவு செய்ய வேண்டும். இந்தியா இரு நாடுகளின் தீர்வை ஆதரிக்கிறது. அமைதி காக்கும்படி இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றார்.