Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேற்கு வங்க கல்லூரிகளில் வேத கணிதம் சாணக்கிய நீதி பாடங்கள் விரைவில் அறிமுகம்: பாஜ அரசு முடிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜ அரசு பொறுப்பேற்ற பின், இம்மாநிலத்தில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதற்கான குழுவில் இடம்பெற்றுள்ள கல்யாணி பல்கலை.யின் துணை வேந்தர் கலோல் பால் தனியார் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய கால கட்டத்திற்கு தொடர்புடைய கணித முறைகள் மற்றும் வேத கணித சூத்திரங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

ஐஐடிக்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணிதம், வானியல் உள்ளிட்ட பண்டைய மரபு அறிவு சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சாணக்கியரின் நிர்வாகத் திறன்கள் மற்றும் பொருளாதாரச் சிந்தனைகள் ஆகியவை அரசியல் அறிவியல், பொருளாதாரப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.