உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கச்சா எண்ணெய் சந்தையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் ,சர்வதேச சந்தையில் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை இரண்டு சதவீதத்திற்கு மேல் உயர்ந்து கடந்த ஆறு மதங்களின் இல்லாத உச்சத்தை தொட்டது.
ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 111 டாலர் அளவுக்கு உயர்ந்தது.ஆனால் வார தொடக்கத்திலே நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பிராண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2% சரிந்து ஒரு பீப்பாய் 111 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. இதற்கு பின்னால் முக்கிய காரணமாக இருப்பது மேற்காசியாவில் அமைதி பேச்சு வார்த்தைகள் முன்னேறலாம் என்று எதிர்பார்ப்பு தான்.
போர் பதற்றம் தணிந்தால் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையலாம் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்க தொடங்கி உள்ளது. இந்த விலை சரிவு இந்திய போன்ற எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்த நாடுகளுக்கு நிம்மதியை அளிக்குமா? பெட்ரோல்,டீசல் விலைகளிலும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.


