Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வார இறுதி நாளிலும் அதிரடி தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.800 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 14ம் தேதி அன்று தங்கம் ஒரு கிராம் ரூ.14,200க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13600க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 20ம் தேதி பவுன் ரூ.1 லட்சத்து 16,800 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை காலை, மாலை என கிராமுக்கு ரூ.250 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 850க்கும், பவுனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் வார இறுதி நாளான நேற்றும் தங்கம் விலை ஏற்றத்தை தான் கண்டது. அதாவது, நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19600க்கு விற்பனையானது.

வெள்ளி விலை நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விசேஷத்திற்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.